பினாங்கு கட்டுமானத் தளம் இடிந்து விழுந்தது தொடர்பில் போலீஸ் விசாரணை ஆரம்பம்

ஜார்ஜ் டவுன் :

பினாங்கு தளவாட வளாகத்தின் கட்டுமானத்தில் பெரிய கான்கிரீட் பீம்கள் இடிந்து விழுந்ததில், மூன்று வங்காளதேச தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதாக முதலில் நம்பப்பட்ட நான்கு வங்காளதேசத் தொழிலாளர்கள், முன்னரே இடிபாடுகளிலிருந்து தப்பிவிட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இடிபாடுகளிலிருந்து தப்பிய நான்கு தொழிலாளர்களும் நேற்று புதன்கிழமை (நவம்பர் 29) விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவர்கள் அதே நாளில் (நவ. 29) விடுவிக்கப்பட்டனர்,” என்று தென்மேற்கு காவல்துறை தலைவர் காமாருல் ரிஸ்சால் ஜெனால் இன்று (நவ. 30) கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here