சிக்கலுக்கு மேல் சிக்கல். குஷ்பு வாய் திறந்தாலே பிரச்சனைதான் !

சென்னை:

ணிப்பூர் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குஷ்புவுக்கு திமுக ஆதரவாளர்கள் பலர் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், இதற்கு பதிலளித்த குஷ்பு ‘சேரி’ மொழியில் என்னால் பேச முடியாது என விமர்சித்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில நடிகை த்ரிஷா குறித்து, நடிகர் மன்சூர் அலிகான் பேசியிருந்த கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. அவரது பேச்சுக்கள் அருவருக்கத்தக்கதாக இருப்பதாக கூறியுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால்தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து x சோஷியல் மீடியாவில் “நடிகர் மன்சூர் அலிகான் என்னை பற்றி அரு வருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பாலியல் ரீதியாகவும், மரியாதைக்குறைவாக மற்றும் கேவலமான எண்ணத்துடன் பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னுடன் நடிக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஆசைப்படலாம். இதுவரை அவருடன் சேர்ந்து நடித்ததில்லை என்பதில் நிம்மதியடைகிறேன். இனியும் சேர்ந்து நடிக்கமாட்டேன். இவரைப்போன்றவர்கள் மனிதக்குலத்திற்கே அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று த்ரிஷா பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சினிமா வட் டத்தை தாண்டி அரசியல் தளத்திலும் எதிரொலித்தது.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் அரு வருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார். சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருந்தார். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என அதன் உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கூறியிருந்தார். குஷ்புவின் கருத்து சோஷியல் மீடியாக்களில் விவாதங்களை ஏற்படுத்தியது.

அதாவது மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது மகளிர் ஆணையம் என்ன செய்துகொண் டிருந்தது? என்று திமுக ஆதரவாளர்கள் x சோஷியல் மீடியாவில் குஷ்புக்கு சற்று காட்டமாக கேள்வியெழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த குஷ்பு, “இதைதான் திமுக குண்டர்கள் செய்கிறார்கள். இதுதான் அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பெண்களை அவமதிக்க தவறான மொழியை கையாள்கிறார்கள். என்னால் உங்களின் ‘சேரி’ மொழியில் பேச முடியாது. ஆனால் இந்த விவகாரம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும், “திமுக உங்களுக்கு சட்டத்தை பற்றி கற்பிக்கவில்லை எனில் நீங்கள் வழக்க றிஞராக இருப்பது வெட்கக்கேடானது. உங்களை போன்ற முட்டாள் திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றி இருப்பது அவமானம். ஸ்டாலின் அவர்களே உங்களை சுற்றி இருக் கும் முட்டாள் கூட்டமே உங்களை அழித்துவிடும்” என்றும் விமர்சித்துள்ளார்.

இதில் அவர் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் பேசும் மொழியை ‘சேரி மொழி’ என இழிவு படுத்தியுள்ளார் என்றும், அதன் மூலம் அம்மக்களையும் இழிவுபடுத்தியுள்ளார் எனவும் குஷ்பு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் குஷ்புவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மறுபுறம், திமுக ஆதரவாளர் பேசியது மட்டும் சரியா? என பாஜக ஆதரவாளர்கள் சோஷியல் மீடியாக்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here