கிள்ளானில் வீட்டின் கூரை மீது ஆடையின்றி நடமாடிய வெளிநாட்டவர் கைது!

கோலாலம்பூர்:

கிள்ளான், தாமான் அண்டாலாஸ் ஜெயாவில் உள்ள வீடு ஒன்றின் கூரை மீது நேற்று காலை ஆடைகளின்றி நடந்து சென்ற 37 வயது வெளிநாட்டு ஆடவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காலை 7 மணி அளவில் கூரையின் மீது நின்று கொண்டிருந்த அவரைக் கண்ட பொதுமக்கள், அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்குத் தீயணைப்பு மீட்புத் இலாகாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொண்டது, சேதம் விளைவித்தது மற்றும் குடி நுழைவு சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் கீழ் தெற்கு கிள்ளான் குற்றவியல் புலனாய்வுத் இலாகா வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனிடையே, பொதுமக்களிடையே தேவையில்லாத அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், இச்சம்பவம் தொடர்பான காணொளிகளைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here