சமிஞ்சை விளக்கில் 11 கார்கள் மீது மோதிய லோரி

நீலாய், ஜாலான் பெர்சியாரன் புசாட் பண்டார் என்ற இடத்தில் போக்குவரத்து விளக்கு சந்திப்பில் நின்றிருந்த 11 கார்கள் மீது லோரி மோதியது.

நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஃபாஸ்லி அப்துல் ரஹ்மான் கூறுகையில், ஒரு லோரி சுமார் எட்டு டன் காகிதங்களை ஏற்றிக்கொண்டு மலாக்காவிலிருந்து சிலாங்கூர் பெரானாங்கிற்குச் சென்று கொண்டிருந்தது.

லோரியின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. 26 வயதான ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி நின்ற வாகனங்கள் மீது மோதியது. கார்  ஓட்டுநரான ஒருவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. லோரி டிரைவர் மற்றும் மற்ற கார் டிரைவர்கள் காயமின்றி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here