கோலாலம்பூர்: இந்தாண்டு சீனா- மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை மலேசிய குடிமக்களுக்கு சீனாவுக்கு விசா இல்லாத பயணத்தை நீட்டிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சலுகை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியா மை செகண்ட் ஹோம் (MM2H) திட்டம் சீன நாட்டவர்களிடையே பிரபலமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா சீன வணிக கவுன்சில் இயக்குனர் டத்தோ பே ஹாங்காங் கூறுகையில், சீனாவில்...
கோலாலம்பூர்: தலைநகரில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கூடுதலான சிறார்கள் நாள் ஒன்றுக்கு மூன்று வேளைக்கும் குறைவாக உணவை உண்கின்றனர். உணவு விலை, வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் குடும்பங்கள் செலவைக் குறைத்துக்கொள்வதே அதற்குக் காரணம். விலைவாசி உயர்வாலும் நிதிப் பிரச்சினையாலும் பல குடும்பத் தலைவர்கள் (கிட்டத்தட்ட 40%) நீண்டநேரம் வேலை செய்வதுடன் உணவருந்துவதையும் உணவு அல்லாத மற்ற பொருள்களில் செலவிடுவதையும் குறைத்துக்கொண்டு உள்ளனர். கோலாலம்பூரில் 16 குடியிருப்புகளில் வசிக்கும் 755 குறைந்த வருமானக்...
ஜோகூர் பாரு: ஜோகூர் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு சோதனைகளில், 52 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரையும் இரண்டு உள்ளூர்காரர்களையும் தடுத்து வைத்துள்ளது. 20 முதல் 46 வயதுடைய சந்தேக நபர்கள் கடந்த புதன்கிழமை (மே 8) காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக அதன் நடப்பு இயக்குநர் முகமட் பைசல் ஷம்சுதீன் தெரிவித்தார். “விசா அனுமதிகள் மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் வேலை செய்வதாக பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, இஸ்கண்டர்...
பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, நாளை மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது. அந்த ஆட்டத்தில் ஜோகூர் டாருல் தக்சிம்முடன் அது மோத இருந்தது குறிப்பிடத்தக்கது. சிலாங்கூரின் நட்சத்திர ஆட்டக்காரர் ஃபைசால் ஹாலிம் மீது அண்மையில் அமில வீச்சு நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை...
கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாளுவதற்கு மனிதவளத்துறையின் கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. “வெளிநாட்டு ஊழியர்களின் புகார்களையும் துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள்வது எளிதல்ல என்பதை அமைச்சகம் அறிந்துள்ளது. சில வேளைகளில் உள்ளூர்த் தொழிலாளர்களைப் போல் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமை புலம்பெயர் ஊழியர்களுக்குக் கிடைக்காமல் போகலாம், அதனைக் கருத்தில் கொண்டு இந்த தனிப்பிரிவு உருவாக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்...
கோத்த கினபாலு: 2020 ஆம் ஆண்டு சண்டகானுக்கு பயணித்த போது 50 கிலோ போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு ஜோகூரியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ செலஸ்டின் ஸ்டூயல் காலிட் 22 வயதான சூ ஷான் யுவன், 24 வயதான லியூ ஜெங் டா 26 வயதான ஃபாங் வெய் ஹாங் மற்றும் மெங் டி சுவான் 23 ஆகியோருக்கு 39B ஆபத்தான மருந்துச்...
பிரெஸ்மாவின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெறுகிறது. இந்த விருந்து உபசரிப்பில் மக்களவை சபாநாயகர் ஜோஹாரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து உபசரிப்பில் மலேசியாவில் உள்ள அனைத்து  பராம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டன. பிரெஸ்மாவின் அழைப்பை ஏற்று இந்த திறந்த இல்ல உபசரிப்பிற்கு சிறப்பு விருந்தினராக  மக்களவை சபாநாயகர் ஜோஹாரி வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கும் வகையில்...
அலோர் ஸ்டாரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு மேம்பாடுகளுக்காக மொத்தம் 29,500 ரிங்கிட் தவறான உரிமைகோரல்களை சமர்ப்பித்த மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், முன்னாள் மெர்போக் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் அஸ்ரினா சூரிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரிக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் 45,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. 46 வயதான காலிட் அப்துல் ஹமீத், நீதிபதி என் பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் 3 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். குற்றச்சாட்டுகளின்படி, அவர்...
 அரசாங்கத்தின் மீதான இந்திய சமூகத்தின் அதிருப்திக்குக் காரணம், அவர்களுக்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகளை வழங்குவதே தவிர, அரசாங்கக் கொள்கை அல்ல என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சண்டியாகோ கூறினார். ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை, இந்திய சமூகம் வறுமையைச் சமாளிக்கவும் இளைஞர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் பெண்களுக்கு ஆதரவாகவும் உதவுவதில் தெளிவாக உள்ளது. இருப்பினும் அதற்கு மேல், அரசாங்கத்திற்குள் சில தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் என்று சண்டியாகோ இன்று...
2023 எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் வரும் 2024 மே 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது. நாடு முழுவதும்  மொத்தம் 3,340 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 870 மாணவர்கள் பரீட்சை எழுதினர். பள்ளிகளில் 2023 எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் முடிவுகளை தத்தம் பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம். தனிப்பட்ட முறையில்...