Tuesday, August 11, 2020
Home மலேசியா

மலேசியா

கோலாலம்பூர்: கொலை வழக்கில்  மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர். குணசேகரன் உள்ளிட்ட 6  பேருக்கு உயர் நீதிமன்றம் 2015 ல் துணை அரசு வக்கீல் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸை  கொலை செய்ததற்காக தூக்கு தண்டனை  விதித்துள்ளது. நவம்பர் 27,2017 அன்று மொரைஸைக் கொலை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆறு பேரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.  இவ்வழக்கில்  அரசு தரப்பு வெற்றி பெற்றதாக நீதிமன்றம் கண்டறிந்ததைத் தொடர்ந்து  டாக்டர் குணசேகரன், ஆர்.தினீஷ்வரன்,...
சிரம்பான் வட்டரத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏந்தி நிற்கும் தாய்மார்களுக்கு இலவச டக்சி சேவையை கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கி வருகிறார் 33 வயது மதிக்கதக்க இந்திய இளைஞர் பி.ரவிந்திரன். தாம் சிறுவனாக இருந்தப்பொழுது தொலைக்காட்சியில் பார்த்த இல்லம் எனும் தமிழ் திரைப்படத்தின் தூண்டுதல் காரணமாக, தாம் இத்துறையை தேர்ந்தெடுத்து அதன்வழி இச்சேவையை தொடர்ந்து செய்து வருவதாக குறிப்பிட்டார். இனம் பாராமல் அனைத்து தர தாய்மார்களுக்கு இச்சேவை மனதார செய்து...
கோலாலம்பூர் - செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள விவகாரத்திற்கு மலேசியாவும் இந்தியாவும் அனைத்து சாத்தியமான அரச தந்திர வழிகளில் தீர்வு காண முனைப்புக் காட்ட வேண்டும் என்று எம்டியூசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதிக்குமானால் அது மலேசிய செம்பனைத் தொழில்துறை ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் மிகவும் கடுமையாகப் பாதிக்கும் என்று அது தெரிவித்தது. அண்மையில் காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட...
ஈப்போ - பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் இவ்வாண்டில் 1,848 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகியுள்ளனர். 2019இல் 1,855 மாணவர்கள் முதலாம் ஆண்டில் பதிவாகினர். பேராக் மாநிலத்தில் 6 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் எந்தவொரு மாணவரும் பதிவு செய்யப்படவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி, பொண்டோக் தஞ்சோங், சுங்கை தீமா, டத்தோ சிதம்பரம் பிள்ளை, களும்பாங் மற்றும் ஹோலிரோட் ஆகியவையே அப்பள்ளிகளாகும். இருப்பினும், ஹோலிரோட்...
புத்ராஜெயா,ஏப்.11- முடி திருத்தும் கடைகள், ஹார்ட்வேர் கடைகள், மின்னியல் பொருள் கடைகள் கடுமையான நிபந்தனைகளுடன் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவின் கீழ் செயல்பட அனுமதிக்கப்படும். சில குறிப்பிட்ட துறைகள் கட்டம் கட்டமாக மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் எனவும் நிரந்தர நடைமுறை விதிமுறைக்கு ஏற்ப அவை செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் துறைகள் பற்றியும் சில துறைகள் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட அனுமதிப்பது...
கோலாலம்பூர் - இந்த மிக மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார். கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மிக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தத் தோல்வியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை. கடந்த பொதுத்தேர்தலோடு ஒப்பிடுகையில் இது மிக மோசமான தோல்வி. நாங்கள் மிகச்சிறப்பான நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சபா மாநில மக்கள் எங்கள் மீது...
குளுவாங் - தாமான் ஸ்ரீ இம்பியான், குளுவாங்கில் உள்ள தனது வீட்டின் முன்புறம் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மூன்று நபர்களால் பாராங்கத்தியால் தாக்கப்பட்டார். நேற்றுக் காலை 7.13 மணி அளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் எஸ். ராஜேஸ் (வயது 37) தாக்கப்பட்டதாக குளுவாங் போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அப்டு இஸ்மாயில் தெரிவித்தார். இவர், குளுவாங் அருகே உள்ள தாமான் சுரியா இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஆவார். தலையிலும் கை-கால்களிலும் ஆழமான வெட்டுக் காயத்திற்கு ஆளான...
நாட்டில் புகழ் பெற்ற தொழிற்போட்டைகளில் மஸ்ஜிட் இந்தியாவும் ஒன்று. தொடக்க காலத்திலிருந்து அதிகமான மக்கள் புழங்கும் இடமாக மஸ்ஜிட் இந்தியா திகழ்கிறது என மிபா எனப்படும் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் கூறினார். கோவிட் 19 பெருந்தொற்றுக்கு பிறகு மஸ்ஜிட் இந்தியா மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இங்கு மொத்தம் 600 கடைகள் உள்ளன. பல்வேறு வியாபாரங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....
  பெர்சத்து கட்சிக்குத் தாமே இன்னும் தலைமை வகிப்பதாகவும் தனது பொறுப்பு நீக்கக் கடிதம் செல்லாது. உரிய நேரம் வரும்…என்னை நீக்கிய முஹிடின் யாசினை சரியான சட்ட அமலாக்கத்தின் வழி நீக்குவேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் திட்டவட்டமாக கூறினார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அம்கோர்ப் மால் கட்டடத்தில் அமைந்துள்ள பெர்சத்து கட்சியின் தலைமையகத்திற்குச் சென்ற மகாதீர் தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்த அவர் இவ்வாறு கூறினார்.    யாரும் அவரை...
கெப்போங், கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை. தங்கும் இடம், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகள் போல்தான் கல்வியும். கல்வி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மட்டும் பிரகாசமாக்கவில்லை. மாறாக பொருளாதாரத்தில் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மலேசியா வளம் பெறுவதற்குரிய மனித ஆற்றலை உருவாக்கும் ஒரு முக்கியப் பங்கையும் ஆற்றுகிறது.ஒரு குழந்தைக்கு கல்வி வழங்க வேண்டிய அவசியம் - முக்கியத்துவம் குறித்து அதிகமாகவே பேசப்படுகிறது . ஆனால்,...