Home மலேசியா

மலேசியா

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது பத்தாங்காலி சாலையில் விபத்தில் சிக்கினார். தற்போது அவர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டுள்ளார். சினார் ஹரியனை தொடர்பு கொண்ட அதிகாரி இந்த விஷயத்தை உறுதி செய்தார்.
பெட்டாலிங் ஜெயா: தொழிலாளர் மறுசீரமைப்பு மற்றும் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு "இடைத்தரகராக" செயல்படும் ஒரு கும்பல்  முறியடிக்கப்பட்டது. ஒரு அறிக்கையில், குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ கைருல் டிசைமி டாவூட்  கும்பலை சேர்ந்த  உறுப்பினர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 7) பினாங்கில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு மாத கால கண்காணிப்பு நடவடிக்கையின் விளைவாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையான நடைமுறைகள் இல்லாமல் திட்டத்திற்கு பதிவு செய்து கொண்டிருந்த கும்பலை...
அம்பாங் ஜெயாவிலுள்ள பண்டான் இண்டாவில் உணவு விநியோகம் செய்துவரும் இருவரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கெத்தும் நீர் அடங்கிய 120 திரவ போத்தல்களையும் பறிமுதல் செய்ததாக, அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபாரூக் எஷாக் கூறினார். போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு போலீஸ் குழு நடத்திய சோதனையில், சந்தேகத்தின் பேரில் 25 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்தது. "சம்பந்தப்பட்ட நபரை...
புத்ராஜெயா, பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார். பேராக்கில் 10 தமிழ்ப்பள்ளிகளிலும் கெடாவில் 6 தமிழ்ப்பள்ளிகளிலும் பகாங்கில் 4 தமிழ்ப்பள்ளிகளிலும் சிலாங்கூரில் 3 தமிழ்ப்பள்ளிகளிலும் ஜோகூரில் 2 தமிழ்ப் பள்ளி களிலும் நெகிரி செம்பிலானில் 1 தமிழ்ப்பள்ளியிலும் 10க்கும் குறைவான மாண வர்களே கல்வி...
ஜோகூர் பாரு வனவிலங்கு சட்டத்தின் கீழ் பறவைகள் கடத்தல் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஒரு நபர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.இங்குள்ள கோத்தா திங்கியில் உள்ள ஃபெல்டா புக்கிட் வாகாவில் 62 பறவைகள் வெள்ளை நிறமுள்ள ஷாமா வகை  பறவை (புருங் முராய் பாத்து) இனத்தை முறையான  ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் (பெர்ஹிலித்தான்) இயக்குநர் சல்மான் சாபன்...
கடந்த ஆண்டு 1.3 மில்லியன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் Oral Smokeless Cigarette  மூலம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 43,019 மாணவர்கள் புகைபிடித்ததாகக் கண்டறியப்பட்டது. சுகாதார துணை அமைச்சர், Lukanisman Awang Sauni, அதே நேரத்தில், இரண்டு மில்லியன் ஆரம்ப பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட திரையிடல் முடிவுகள் மொத்தம் 341 மாணவர்களை இந்த செயலில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது கூறினார். புகைபிடிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு சிகரெட் தொடர்பாக தலையீடு...
அலோர்  ஸ்டார்: லங்காவி அருகே உள்ள கம்போங் புக்கிட் மாலுட் குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 17 வீடுகள் எரிந்து நாசமானது. கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குனர் சயானி சைடன் கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக மாலை 6.47 மணிக்கு தங்களுக்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்தது. பெர்சியாரான் புத்ரா மற்றும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) அதிகாரிகள் மற்றும்...
குளுவாங்: சிம்பாங் ரெங்காமில் உள்ள ஒரு கிராமத்தில் கேபிள்களை திருடிய சந்தேகத்தின்பேரில் இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 27 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதன் மூலம், குறைந்தது ஆறு கேபிள் திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணலாம் என நம்பப்படுகிறது என்று, சிம்பாங் ரெங்காம் மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் பஹ்ரின் முகமட் நோ கூறினார். மேலும் அங்குள்ள கம்போங் ஷாரியைச் சேர்ந்த ஒருவர் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து,...
  கோலாலம்பூர்- கற்றல் சித்தாந்தம் என்பது ஓர் அறையில் நான்கு சுவர்களுக்கு உட்பட்டதாக மட்டும் இருந்துவிடக்கூடாது. மாறாக புதிய வழமைக்கு ஏற்ப எந்த இடத்திற்கும் நேரத்திற்கும் ஏற்புடையதாகவும் பொருத்தமாகவும் இருக்குமாறு மாற்றத்திற்குத் தயாராக இருக்க வேண்டுமென்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார். கல்வி ஆற்றலில் எந்தவொரு மாணவரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்குக் கற்பித்தல் கற்றல் களத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் ஆகியோரதம் மனவோட்டங்களையும் கருத்துகளையும் கல்வி அமைச்சு...
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) 561 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இரண்டு புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முகநூல் நேரடி சந்திப்பில், சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சபா 488 சம்பவங்களை பதிவு செய்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்யப்பட்ட மொத்த சம்பவங்களில் இருந்து அதிக தொற்றுநோய்களாகும்.இதைத் தொடர்ந்து சிலாங்கூர்...