
ஜார்ஜ் டவுன் –
நிபந்தனை இயக்கம் கட்டுப்பாட்டு ஆணை (சி.எம்.சி.ஓ) காலத்தில், பினாங்கு மக்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி திருவிழாவுக்கான பொருட்கள் போதுமான அளவில் உள்ளன.
உள்நாட்டு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் இயக்குநர் மொகமட் ரிட்ஜுவான் நவம்பர் 7 ஆம் தேதி நடத்திய சோதனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகளில் பொருட்களின் விலையில் அதிகரிப்பு இல்லை என்று கூறினார்.
கண்காணிக்கப்படும் அடிப்படைத் தேவைகளில் சர்க்கரை, சமையல் எண்ணெய், மாவு, அரிசி, வெள்ளை ரொட்டி, பால் பவுடர், கோழி, காய்கறிகள், முட்டை, வெங்காயம், முகக்கவசம் திரவம் ஆகியவை உள்ளன.
இருப்பினும், நவம்பர் 14 ஆம் தேதி தீவபளியைக் கொண்டாடும் இந்திய சமூகத்தின் ஏற்பாடுகள் காரணமாக கொள்முதல் அதிகரிப்பு உள்ளது.
தினசரி அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது போதுமானதாக இருக்கும் என்பதால் அசாதாரண கொள்முதல் செய்ய வேண்டாம் என்று மொகமட் ரிட்ஜுவான் நுகர்வோருக்கு அறிவுறுத்தினார்.
வாங்கும் முன் நுகர்வோர் விலை தகவல்களைப் பெறுவதை எளிதாக்குவதற்காக, விற்கப்பட்ட பொருட்கள் விலைக் குறிச்சொற்களால் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் வணிகர்களிடம் கூறினார்.
அதே நேரத்தில் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம் என்றும், விலை கட்டுப்பாடு, இலாப எதிர்ப்பு சட்டம் 2011 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை மறைத்து வைத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளி மீது விநியோகக் கட்டுப்பாட்க்ச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்றும் அவர் எச்சரித்தார்.