ஓன்பது பள்ளிகளில் 98 மாணவர்கள் மட்டும்தானா?

 

பகாங் தெமெர்லோ மாவட்ட 9 தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 98 மாணவர்கள் மட்டுமே! பியோங் தோட்டத்தில் 1 மாணவர் கூட பதிவாகவில்லை. பி.ராமமூர்த்தி , மெந்தகாப் ஜன .23 – பகாங் தெமெர்லோ மாவட்டத்தில் அமைந்துள்ள திருமதி தமிழ் பள்ளிகளில் இவ்வாண்டு முதலாம் ஆண்டுக்கு பதிவாகியுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 98 மட்டுமே . கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மாணவர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது , ஒன்பது தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பதிவு செய்த மாணவர்கள்.மெந்காப் நகர் குழுவகத் தமிழ்ப்பள்ளி 54 மாணவர்கள் , தேசிய வகை லஞ்சாங் தமிழ்ப் பள்ளியில் 8 மாணவர்கள் , செமந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 6 மாணவர்கள் , சுங்கை தெக்கால் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 6 மாணவர்கள் , எடின்சோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 3 மாணவர்கள் , தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 10 மாணவர்கள் , தேசிய வகை சுங்கை காவான் தோட்டத் தமிழ் பள்ளியில் 2 மாணவர்கள் , யாவ் செங் லுவான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 9 மாணவர்கள் , இதில் பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டில் ஒரு மாணவர் கூட பதிவாகவில்லை.

இந்த நிலைமை  நீடிக்குமானால் இவ்வட்டாரத்தில் அமைந்துள்ள சில பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது பரவலாகப் பேசப்படுகிறது.

அதே வேளையில் இவ்வட்டாரத்தில் அமைந்துள்ள மலாய் ஆரம்பப்பள்ளி , சீனப் பள்ளிகளில் 300 க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நமக்கு நாமே எதிரிகளாகிக் கொண்டிருக்கிறோம் என்றெ பரவலாகப் பேசப்படுகிறது.

                                                                         பி .இராமமூர்த்தி