
அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியப் பெண் கமலா ஹாரிஸ். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தெற்காசியப் பெண். கமலா ஹாரீசுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அமெரிக்காவின் புதிய துணை அதிபர் கமலா ஹாரீசின் அனிமேஷன் பதிப்பு, அவரது ஆளுமைக்கு மிகவும் நியாயம் செய்திருப்பதாக சிலாகிக்கப்படுகிறது. அந்தப் படத்தில் ‘கமலா ஹாரிஸ்- மேடம் துணை ஜனாதிபதி’ என எழுதப்பட்டிருந்தது.
பாராட்டுகளுக்கு எல்லாம் மகுடம் வைத்தது போல், பிரபலமான தொலைக்காட்சி சேனலான காட்டூன் நெட்வர்க் பிரத்யேகமான முறையில் துணை அதிபருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் துணைத் தலைவரான முதல் பெண்ணை வாழ்த்துவதற்காக, கார்ட்டூன் நெட்வொர்க் தனது பிரபல Powerpuff கேர்ள் என்ற கதாபாத்திரத்தை கமலா ஹாரிஸைப் போல் சித்தரித்துள்ளது.
கமலா ஹாரிசுக்கு பாராட்டு கார்ட்டூன் நெட்வொர்க், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம், கமலாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிக்குப் பின்னர், Powerpuff பெண்ணின் பதிப்பை அவருக்கு உரித்தாக்கிவிட்டது.
வெள்ளை காலணிகளுடன் கடற்படை சீருடையின் அடர் நீல நிற உடையும், ஆடையில் இணைக்கப்பட்ட அமெரிக்க பேட்ஜும் அணிந்த Powerpuff கேர்ள் இவர்.