
கோலாலம்பூர் :
நாடாளுமன்ற அவையில் இன்று 2021 வழங்கல் மசோதா மீதான விவாத அமர்வில், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டவைகளில் பின்னர் கவனம் செலுத்தும்.
அவையின் உத்தரவு ஆவணங்களின் அடிப்படையில், அமர்வின் ஆறாவது நாளான இன்று வாய்வழி கேள்வி-பதில் அமர்வு முடிந்தவுடன் விவாதம் தொடங்கும்.
இதில் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வரம்பு. அரசாங்கத்தைச் சேர்ந்த 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 39 பேர் எதிர்க்கட்சியினராக இருப்பர். அல்லது சுயேட்சை உறுப்பினர்களாகவும் இருப்பர்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த அமர்வு நடைபெறும். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமை, பாலஸ்தீன ஆக்கிரமிப்பு போன்றவற்றையும் எடுத்துக்கூறுவார்கள். இவை வாய்வழி கேள்வி பதில் அமர்வில் எழுப்ப திட்டமிடப்பட்டுள்ள கேள்விகளாக இருக்கும்.
இந்த ஆண்டு பொருளாதார வீழ்ச்சியால் பணிநீக்கம் செய்யப்படும் புதிய பட்டதாரிகள், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மனித வள அமைச்சரிடம் டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் கேல்விகள் எழுப்புவார்.
இது தவிர, பாலஸ்தீனத்தின் ஆக்கிரமிப்பை அங்கீகரிப்பதற்கான இஸ்ரேலின் அநியாய இயல்பாக்கம் திட்டத்திற்கு ஆட்சேபனைகளை தெரிவிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) போன்ற சர்வதேச அமைப்புகளுடன் நடவடிக்கை எடுக்குமாறு அஹ்மட் தர்மிசி சுலைமான் வெளியுறவு அமைச்சரிடம் வினா எழுப்புவார்.
மேலும், 2008 முதல் தற்போது வரை ஆராய்ச்சி மையத்தால் உற்பத்தி செய்யப்படும் புதிய நெல் விதைகளின் எண்ணிக்கை குறித்து வேளாண் உணவுத் துறை அமைச்சரிடம் டத்தோ ஜஹாரி அப்துல் விளக்கம் கோருவார் .
நாடாலுமன்ற அவையில் அட்டவணைப்படி 14 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தின் மூன்றாவது கூட்டம் டிசம்பர் 15 வரை 27 நாட்களுக்கு நடைபெறும் .