சாதனைப் படைக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

பாரிட் புந்தார், டிச. 15

பேராக் கிரியான் மாவட்டம் பாரிட் புந்தார் வவாசான் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளியின் கோரிக்கைகள் விரைந்துப் பரிசீலிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்கின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர நாராயணன் உறுதி கூறினார்.

பள்ளியின் 48 ஆவது விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிக்கு  திடீர் வருகை புரிந்த அவரிடம் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் தங்கள் பள்ளிக்குத் தேவையான சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அடுத்தாண்டு  பள்ளியில் நடைபெறவுள்ள செயல் திட்டங்கள் பற்றி பேசிய அவர்கள் பள்ளியின் கணினி அறைக்கும் தேவையான தளவாடங்கள், விளையாட்டுக்குத் தேவையான தளவாடங்கள் உள்ளிட்ட வேறு சில தேவைகள் பற்றி வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த தியாகராஜ் இந்த ஆண்டிற்கான மானியங்கள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இக்கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தாம் பேச இருப்பதாகவும் சொன்னார்.

கிரியான் மாவட்டத்தின் பெரிய பள்ளியாகவுள்ள இப்பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக இருக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும்  தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் தமது பங்களிப்பு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கு வருகை தந்த அவரை பள்ளியின் தலைமையாசிரியர் இரா. சுப்ரமணியம், துணைத் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் சிவானந்தம்,  பொறுப்பாளர்கள் வரவேற்று உபசரித்தனர். சீரேஷ்குமார் பள்ளியின் அடுத்தாண்டிற்கான செயல் திட்டங்கள் பற்றிய அறிக்கையை அவரிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here