போலீஸ் கடிதம் இல்லையேல் திரும்புக!

கோத்தா பாரு-

போலீஸ் நிலையத்தின்  ஒப்புதல் கடிதங்களைக் காட்டத் தவறியவர்கள், அல்லது கிளந்தான் மாநிலத்திற்குள் நுழைய சரியான காரணங்கள் இல்லாதவர்கள், இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் உட்பட திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்நடவடிக்கை கோவிட் -19, கிளந்தான் மாநிலத்தில் பரவாமல் தடுப்பதற்கான உறுதியான அறிவுறுத்தல் என்று கிளந்தான்  காவல்துறைத் தலைவர் டி.சி.பி ஷாஃபியன் மமாட் கூறினார்.

இந்த விஷயத்தில், இந்த முயற்சிகள் மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு போலித்தனமான காரணங்கள் எடுபடாது, அதற்காக  முயற்சிக்க வேண்டாம் என்று நேற்று இரவு இங்குள்ள கிளந்தான் தகவல் துறை  நெட்வொர்க்கிங் அமர்வில் செய்தியாளர்களிடம்  அவர் கூறினார்.

இன்று முதல், பெர்லிஸ், பகாங் , கிளந்தான் தவிர தீபகற்ப மலேசியாவின் அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 6 வரை நிபந்தனை இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை (சிஎம்சிஓ) செயல்படுத்தப்படும்.

சாலைத் தடுப்புச்சோதனையில், மாநிலத்தில் நான்கு இடங்களில், பாசிர் புத்தே  ஜெலி,  குவா முசாங் ஆகிய இடங்களில் தலா ஓர் இடம் குறித்து காவல்துறையும் சுகாதார அமைச்சும் கவனம் செலுத்தும் என்று ஷாஃபியன் கூறினார்.

ஸ்வாப் சோதனை தவிர காவல் நிலையத்தில் இருந்து ஒப்புதல் கடிதங்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

நள்ளிரவு முதல், பல்வேறு மாநிலங்களும் 24 மணி நேரம் சாலைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கோவிட் -19 இல் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒவ்வொரு சாலைத் தடைகளிலும் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவ  இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.