மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவுகள்

 ஏற்றுக் கொண்ட விமானி வர்த்தகர்

சிலியாவ்-

இங்குள்ள லாடாங் சிலியாவ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நேர சிற்றுண்டிக்கான உதவிகளை விமானி கேப்டன் கே. பார்த்திபன், வர்த்தகர் யாத்தீஸ் இருவரும் வழங்கினர்.

இந்த தமிழ்ப்பள்ளியில் தற்போது 43 மாணவர்கள் பயில்கின்றனர். அதில் 17 மாணவர்களுக்கு ஆர்.எம்.டி. எனப்படும் சத்துணவு வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் எஞ்சிய 17 மாணவர்களுக்கான சிற்றுண்டிச் செலவுகளை இவ்விருவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், மூன்று மாணவர்கள் இந்த உதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இந்த உதவிக்கான 4 ஆயிரம் வெள்ளி காசோலையை இவ்விருவரும் பள்ளித் தலைமையாசிரியர் சிவகுமாரிடம் வழங்கினர்.

மேலும், இப்பள்ளிக்கு இன்னும் சில உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை அறிந்து அது குறித்த தகவல்களை பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணனிடம் தெரிந்து கொண்டிருப்பதாக பார்த்திபன், யாத்தீஸ் இருவரும் குறிப்பிட்டனர்.