மாமனார் தோல்வி- மருமகள் கொண்டாட்டம்!

உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். அடுத்த அதிபராக ஜோ பிடன் வரும் ஜனவரி மாதத்தில் பதவியேற்க உள்ளார்.

ஜோ பிடன் வெற்றியை அமெரிக்க மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். எனினும் அதிபர் பதவியை விட்டுக்கொடுக்கு ட்ரம்ப்க்கு மனமில்லை. தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் ட்ரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தது அவரது குடும்பத்திலும் பிரச்சினையை உண்டாக்கியுள்ளது. அவரது மனைவி மெலனியா ட்ரம்பை டைவர்ஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே ட்ரம்பின் மருமகளும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ட்ரம்பின் மருமகள், அவரது தோல்வியை ஷாம்பெயின் கோப்பை  பிடன்-ஹாரிஸ் பெயர்கள் பொறித்த தொப்பியுடன் கொண்டாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகளான மேரி எல் ட்ரம்பின் டிவீட்டில், எல்லோரும் நன்றாக தூங்குங்கள். ஏனென்றால் இறுதியாக நம்மால் முடியும். அமெரிக்க மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.