Genting Highlands சுற்றியுள்ள அனைத்து திட்டங்களையும் நிறுத்துங்கள்

பத்தாங் காலி நிலச்சரிவு சோகத்திற்குப் பிறகு, Genting Highlands சுற்றியுள்ள அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிரந்தரமாக கைவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சுற்றுச்சூழல் குழு வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவின் காடுகளை கண்காணிக்கும் Rimba Disclosure Projectன் அறிக்கையின்படி,  தற்போது கட்டுமான பணியில் உள்ள சில பகுதிகள் (சுமார் 5,700 ஹெக்டேர் பரப்பளவு) சுற்றுச்சூழல் உணர்திறன் நிலத்தில் அமைந்துள்ளன.

இது Rancangan Kawasan Khas Bentong, Rancangan Kawasan Khas Genting (316ஹெக்டேர்), Tropicana Windcity development (248.7ஹெக்டேர்), LBS Bina (125ஹெக்டேர்), Pavillion Genting project (14.5ஹெக்டேர்). ஆகியவற்றிற்காக 5,000 ஹெக்டேர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கூறப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை சுற்றுலா, ஆராய்ச்சி மற்றும் கல்வியைத் தவிர, சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, இந்த நிலங்களில் வளர்ச்சிக்கு உள்ளூர் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது திகைப்பூட்டுவதாக உள்ளது. அதற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகள் இந்தப் பகுதிகளில் மீண்டும் காடுகளை வளர்க்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பத்தாங் காலி-Genting Highlands சாலைக்கு அருகில் உள்ள ஆர்கானிக் பண்ணை வளாகத்தில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் போது அந்த இடத்தில் 94 முகாம் பணியாளர்கள் இருந்தனர், அதில் 61 பேர் உயிர் பிழைத்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது, 12 பேரை காணவில்லை. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here