
கோத்தா கினபாலு
சபா, கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான் வெற்றி பெற்றதை தேர்தல் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்தது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் போலி வாக்குச் சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்து அனிபா வெற்றி பெற்றது குற்றம் என நீதிபதி லீ எங் ச்யோங் அறிவித்தார்.
போலி வாக்குகளைப் போட்டது கடுமையான குற்றம், அது தேர்தல் முடிவினை பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனிபாவின் வெற்றியை எதிர்த்து வாரிசான் சபாவின் வேட்பாளர் கரீம் பூஜாங் வழக்கைத் தொடர்ந்தார்.
கரீமிற்கு தேர்தல் ஆணையம் 100,000 ரிங்கிட்டை செலவுத் தொகையாக வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.