கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு

 – போலீஸ்காரர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

ஜோகூர்பாரு-

 கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய அம்சங்களை போலீஸ் அதிகாரிகள் என்றும் காக்க வேண்டும் என ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அயூப்கான் மைடின் பிச்ங்஖ை கருத்துரைத்தார்.

அவர் ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவையொட்டி மக்கள் ஓசை அவரை நேர்காணல் செய்தது. இதில் ஜோகூரில் தாம் பணியாற்றியதையும் இவ்வாண்டின் எதிர்பார்ப்புகளையும் நம்முடன் அயூப்கான் பகிர்ந்து கொண்டார்.

போலீஸ் அதிகாரிகள் என்றும் கடமை தவறக்கூடாது. அவர்கள் என்றும் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக லஞ்சம் என்ற சொல்லுக்கே இடம் கொடுக்கக்கூடாது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, குறிப்பாக அவர்கள் உயர்ந்த பதவியில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது குற்றம் என்று வரும்போது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கக்கூடாது. இவ்விவகாரத்தில் போலீஸ்காரர்கள் சமரசம் செய்து கொள்ளவும் கூடாது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறேன். எனவே கையூட்டு வாங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ங்ட்ட நடவடிக்கை முன்னெடுக்கத் தய்க்கம் காட்ட்டுவதில்லை.

குறிப்பாக இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை, பணித் தரம் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இந்நிலையில் மாநில போலீஸ் தலைமை அதிகாரி, வட்டார போலீஸ் அதிகாரிகள், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.

என் பணியில் நான் கண்டிப்பாக இருக்கிறேன். ஆரம்பக் காலகட்டத்தில் ஒரு சிலருக்கு இது கஷ்டமாகத்தான் இருந்தது என்பதை நானும் அறிந்தேன்.
ஆனால் நாள் ஆக ஆக அவர்கள் என் பாணியைப் பின்பற்றத் தொடங்கியதை உணர்ந்தேன்.

இதனிடையே ஜோகூர் மாநிலத்தில் பல்வேறு குற்றச்ஙெ்யல்களில், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டு வந்த போலீஸ்காரர்கள் கைது ஙெ்ய்யப்பட்டுள்ளனர்.

தற்போது மலேசியாவில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஜோகூர் மாநிலம் முதன்மை வகிக்கின்றது. இது தொடர்பில் 19,013 பேர் போதைப்பொருள் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 33 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 2,765 கிலோ கிராம் எடை கொண்ட போதைப்பொருகளும் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் அயூப்கான் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இம்மாநிலத்தில் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விசாரணைக்கு வந்துள்ள 7,350 குற்றச் சம்பவங்களுள் 3,960 சம்பவங்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

அடுத்ததாக கள்ளக் குடியேறிகள் ஊடுருவலுக்கு உறுதுணையாக இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் என்னால் முடிந்த வரை ஜோகூர் மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைத் தடுக்க முற்படுகின்றேன்.

மாநிலத்தைக் குற்றச்செயல்கள் அற்ற மாநிலமாக உருமாற்றுவதே எனது தற்போதைய முதன்மை நோக்கமாகும் என டத்தோ அயூப்கான் மைடின் பிச்சை கூறினார்.

-கிருஷ்ணன் ராஜு/வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here