சுங்கை பட்டாணி
சுங்கைப் பட்டாணியின் குடியிருப்புப் பகுதி ஒன்றின் குடியிருப்பாளர்கள் காற்றின் தூய்மை மாசு படுத்தப்பட்டதை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமான் சோங்கெட் இண்டாவில் சட்டவிரோத மறுசுழர்ச்சி செய்யும் தொழிற்சாலைகளினால் காற்றின் தரம் வெகுவாக குறைந்ததை அடுத்து, 150க்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் ஒன்று திரண்டு அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இயற்கை வளத்தைப் பாதுகாப்புக் கழகம் அந்த ஆர்ப்பாட்டத்தை முன்நின்று சுமார் 2 மணி நேரம் நடத்தியது. கெடா மாநில அரசு அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரினர்.
அந்த சட்டவிரோத தொழிற்சாளைகளுக்கு மூடும் உத்தரவு விடப்பட்டு, அவற்றின் மின்விநியோகம் துண்டிக்கப் பட்டிருந்தாலும், அவை வழக்கம் போலவே செயல்படுகின்றன.
தங்களின் புகாரை அடுத்து, அந்த தொழிற்சாலைகளும் அவற்றில் இருந்த இயந்திரங்களும் சீல வைக்கப்பட்டன. ஆனால், அடுத்த நாளே அவை வழக்கம் போல இயங்கின.
இதனை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அங்கு குடியிருக்கவே முடியாத நிலை ஏற்படும். எனவே, ஊராட்சி மன்றமும் மாநில அரசும் இதற்குத் தக்க தீர்வை காண வேண்டுமென குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.