சென்னை
பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது மதுமிதா வெளியேறியது உறுதிப்படுத்தும் விதமாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. மேலும் அவர் கையில் ஒரு கட்டு கட்டப்பட்டிருந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றதை உறுதி படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மதுமிதா வீட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணம் கடந்த இரண்டு வாரங்களாக ஆண்கள் பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் அவருக்கு எதிராக செயல்பட்டது.
எனவே அவர்கள் பேசும் வார்த்தைகள் மனதை புண்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் உண்மையான தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது.
அதாவது ஹலோ செயலி டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த ஒரு கருத்து தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் உள்ள காவேரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரியதாகவும் இதன் காரணமாக மதுமிதாவுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததாகவும் இதனையடுத்து உணர்ச்சி வசப்பட்ட மதுமிதா தற்கொலை முயற்சி என்ற விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது