ஆயா அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்!

லண்டன்

குட்டி இளவரசர் பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் மூன்றாவது ஆயாவை தம்பதியினர் தேடி வருகின்றனர் . கடந்த ஆறாம் தேதி ஹர்ரி மேகன் தம்பதியருக்கு ஆர்ச்சி என்கிற அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஆர்ச்சியை பார்த்து கொள்வதற்கு ஓர் ஆயாவை அரச குடும்பத்தினர் நிமிர்த்தனர். ஆனால் அவர் அடுத்த சில நாட்களிலேயே வேலையை விட்டு நின்று விட்டார்.

அவரைத் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி குட்டி இளவரசர் அழுவதால் மேகனால் சரியாக உறங்க முடியவில்லை என புதிய ஆயாவை வேலைக்கு அமர்த்தினர். அவர் இரவு நேரங்களில் மட்டுமே வேலை செய்து வந்த நிலையில் தற்போது மூன்றாவது ஒரு ஆயாவை தம்பதியினர் தேடி வருகின்றனர்.

ஆனால் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியினர் அதில் இவர்களைப் போல ஆயா விஷயத்தில் பெரிதும் சிரமப்படவில்லை .கடந்த 5 வருடமாக மரியா திரேஸா என்பவர் தான் அவர்களின் 3 குழந்தைகளுக்கும் ஆயாவா இருந்து வந்துள்ளார்.2014 லிருந்து அவர் பணிக்கு அமர்த்தப் பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here