கிள்ளான் தாமன் ஜெயா, காப்பார் வட்டாரத்தில் நான்கு ஆடவர்களால் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் சடலம் படுக்கையறையின் முன் கிடந்தது. வட கிள்ளான் காவல்துறைத் தலைவர் எஸ் விஜய ராவ், கொலை வழக்கு பற்றிய தகவல் கிடைத்ததும் அவரது தரப்பினர் இன்று காலை 11.39 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரகசிய கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் 38 வயதான உயிரிழந்த ஆடவரின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நான்கு பேர் நுழைவதைக் காட்டியது.
மற்றொரு சந்தேக நபர் அடையாளம் தெரியாத பதிவு எண் கொண்ட பெரோடுவா மைவி காரில் காத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவத்தின் உண்மையான நோக்கம் குறித்து போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார் விஜயராவ்.










