இன துவேஷத்துக்கு விருந்தா? சைட் சாடிக் பல்டி

கோலாலம்பூர்

சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கிற்கு இளைஞர் விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் விருந்துபசரிப்பு நடத்தியுள்ளார்.

இனவாதத்தைத் தூண்டும் விதமாகப் பேசி பலரின் கண்டனத்துக்கு உள்ளான ஸாக்கரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென வீராவேசமாகப் பேசிய சைட் சாடிக், பூனை போல மனம் மாறி அவருக்கு விருந்து வைத்து சிறப்புச் செய்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி இருக்கிறது.

பல முஸ்லிம் சமூக அமைப்புகளும் தனது பிரிபூமி பெர்சத்து உறுப்பினர்களின் நெருக்குதலும் அவரின் மனம் மாற்றத்துக்கான காரணமா என கேள்வி எழுப்பப்படுகிறது.

அது பற்றி தமது இன்ஸ்டாகிரேமில் எழுதியுள்ள சைட் சாடிக், தானும் பல தவறுகளைச் செய்திருப்பதாகவும், மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பதாக வும், இந்த விவகாரத்தில் ஸாக்கிர் மன்னிப்பு கேட்டுள்ளதால், அதில் மேலும் விவகாரத்தை எழுப்பாமல், நாம் அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவின் கைதுக்குப் பயந்து மலேசியாவில் தஞ்சம் புகுந்து இந்தியர்களின் விசுவாசத்தை கேள்வி எழுப்பியதோடு, விருந்தினர்களாக வந்திருக்கும் சீனர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென கேட்டுக் கொண்ட பின்னர், பல தரப்பாரின் கண்டனத்துக்கு ஆளானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here