கோலாலம்பூர்
கல்வியில் சிறந்த அடைவு நிலையை எட்டியிருக்கும் குற்றவாளியான நுர் ஃபிட்ரி அஸ்மீர் நோர்டினுக்கு, மலேசிய தேசிய பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்துக்குக் கல்வி பயில வாய்ப்பு வழங்கப்பட்டதாக அப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
நூர் ஃபிட்ரி லணடனில் இருந்தபோது 3,000 சிறார் ஆபாச படங்களை வைத்திருந்த 17 குற்றச்சாட்டுக்கு லண்டன் நீதிமன்றத்தில் 5 ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டு, 9 மாத சிறைக்குப் பின்னர் அவர் விடுவிக்கப் பட்டார்.
அதே சமயத்தில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்களையும் சிறார்களோடு உடலுறவு வைத்திருக்கும் வீடியோக்களை வைத்திருந்த குற்றமும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
2015ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இம்பீரியல் கல்லூரியில் பயின்று வந்தபோது நூர் ஃபிட்ரி அந்தக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபிட்ரி யுகேஎம்மில் 2016ஆம் ஆண்டிலிருந்து முனைவர் பட்டத்துக்காகப் பயின்று வருவதாகவும் அவருக்கு அப்பல்கலைக் கழகம் இடம் கொடுத்ததை பல தரப்பாரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.