அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு

சென்னை:

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடக்கும் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. காலையில் தொடங்கி இரவு வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

மாநாட்டில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றுகின்றனர். இந்த விழாவில் மாலையில் தேசிய மாநட்டு கட்சி  தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, தினேஷ் திரிவேதி ஆகியோர் உரையாற்றுகின்றனர். இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிறைவுரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் பல்வேறு  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மதிமுக ஆட்சிமன்ற குழு செயலாளர் டிஆர்ஆர்.செங்குட்டுவன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழககுமார், சைதை.சுப்ரமணி ஆகியோர் சென்ைன அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலினிடம் அழைப்பிதழை வழங்கினர். அப்போது, மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வருவதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here