கோலாலம்பூர்
மலேசியர்கள் ஒரு சில தரப்பினரின் ஆதாயத்துக்காக உணர்ச்சியைத் தூண்டும் விவகாரங்களைக் கிளப்ப வேண்டாம் என மாட்சியமை தங்கிய மாமன்னர் நினைவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு மலேசியர்க்கும் உரிமைகளும் சுதந்திரமும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருந்தாலும் நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகத்தை விளைவிக்கும் வகையில் அதனைத் தவறாக பயன்படுத்தக்கூடாது. அரசியலிலும் அப்படித்தான்.
எதற்கும் ஓர் எல்லை உண்டு. அதனை யாரும் மீறக்கூடாது. 62 வருடமாக கட்டிக்காத்த ஒற்றுமை , அமைதி மற்றும் சுபிட்சத்தை ஒரு முறை நாம் இழந்துவிட்டால் அதனை மீண்டும் மீட்டெடுப்பது மிக கடினம் என தமது அதிகாரப்பூர்வ பிறந்தநாளின் ஒட்டி இஸ்தானா நெகாராவில் நடந்த விருதளிப்பு விழாவில் பேரரசர் அறிவுறுத்தினார். அவ்விழாவில் 795 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.