2013 ஆம் ஆண்டு மோகன் லால் நடிப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி வெளிவந்த படம் ‘த்ரிஷ்யம்’.. தமிழில் கமல் ஹாசன் நடிப்பில் ஜீத்து ஜோசப்பே இயக்க, ‘பாபநாசம்’ எனும் பெயரில் இப்படம் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்றது.
மோகன் லால் , ஜீத்து ஜோசப் கூட்டணி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து, ஒரு புதிய படத்தினை உருவாக்க , அதில் முதல்முறையாக மோகன்லால் ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார்.
இந்த படமும் திரில்லர் கலந்த கமர்ஷியல் படமாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது .
த்ரிஷியம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இணையும் கூட்டணி என்பதால் ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.