‘பேட் பாய்ஸ்’ படத்தின் 4-ம் பாகத்திற்கான சூட்டிங் நிறைவு: எப்போது வெளியாகிறது தெரியுமா?

ஹாலிவுட் பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிக்கும் பேட் பாய்ஸ் படத்தின் 4ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பேட் பாய்ஸ் படத்தின் முதல் பாகம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. இதில் வில் ஸ்மித் மற்றும் மார்ட்டின் லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை பிடிக்கும் மியாமி டிடெக்ட்டிவ் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தனர். இப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு இப்படத்தின் 2ஆம் பாகமும், 2020-ம் ஆண்டு 3ஆம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இப்படத்தின் 4ஆம் பாகம் இந்தாண்டு வெளியாகயுள்ளது. இது தொடர்பாக வில் ஸ்மித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சக நடிகர் மார்ட்டின் லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், “பேட் பாய்ஸ் படத்தின் 4ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்தது. மார்ட்டின் லாரன்ஸ் உடன் நடிப்பது ஒவ்வொரு முறையும் மேஜிக் போன்று உள்ளது. ஜூன் 7-ம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here