கோலாலம்பூர் – மைக்கா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் விவகாரத்தில் திடீர் நீண்ட நெடிய நிசப்தம் ஏன் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பி. கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
வாழ்நாள் சம்பாத்தியத்தை இதில் முதலீடு செய்து ஏமாந்து போனவர்களுக்கு நல்லது செய்யப் போகிறோம், இழந்ததை மீட்டுத் தருகிறோம் என்று மார்தட்டிய ம.இ.கா. எங்கே போனது? அதன் உச்சமன்ற உறுப்பினர் ப. புனிதன் என்னவானார் என்று அவர் கேள்விக்கணைகளை தொடுத்தார்.
இவ்விவகாரத்தை மக்கள் ஓசை முன்னெடுத்த போது, இந்திய சமுதாயத்திற்கு ஒரு புதிய நம்பிக்கை பிறந்தது. அரசியல்வாதிகள் இன்றி மக்கள் ஓசை தனித்து நின்று போராடி இருந்தால் இந்நேரம் நல்ல முடிவு கிடைத்திருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பர்.தமக்கு விளம்பரம் வேண்டி புனிதன் இவ்விவகாரத்தை கையில் எடுத்தாரா? வழக்குத் தொடுத்த 3 பங்குதாரர்கள் எங்கே போனார்கள்? மைக்கா கணக்கு வழக்குகளையும் சோத்து விவரங்களையும் முறைகேடுகளையும் ஊழல்களையும் புட்டுப்புட்டு வைத்தலிக்குய் டேட்டர்ஸ் வாயடைத்துப் போனது ஏன்?தங்களது சுய லாபத்திற்காக இவர்கள் அனைவரும் மக்கள் ஓசையைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்று கிருஷ்ணன் தொடர்ந்து கேள்விகளை அடுக்கினார்.
தங்களது பங்குப் பணம் திரும்பக் கிடைத்து விடும் என்று நம்பியிருந்த பங்குதாரர்களுக்கு பட்டை நாமம் போட்டது அடுக்குமா? புனிதன் இதற்கு பதில் சொல்வாரா? என்ன நடந்தாலும் நான் இருக்கிறேன். துணிந்து விட்டோம் என்று வீர வசனம் பேசியது எல்லாம் வெறும் நடிப்பு தானா என்றும் கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
– பி.ஆர்.ராஜன்