புத்ராஜெயா – மோசமான புகைமூட்டம் காரணமாக நாடு முழுவதும் 1,484 பள்ளிகள் மூடப்பட்டதாக கல்வி அமைச்சரகம் அறிவித்தது.
அதேவேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. காற்றின் தூய்மைக்கேடு குறியீட்டின் அளவு 200க்கும் அதிகமாக உயர்வு கண்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஏழு மாநிலங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளும் செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் மூடப்படுகின்றன என்று மாநில அரச்சரகம் அறிவித்துள்ளது. அதே வேளையில் பினாங்கு, கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களிலும் இரண்டு நாட்களுக்குப் பள்ளிகள் மூடப்படுகின்றன.