டத்தோ லீ சோங் வெய் – டத்தோ நிக்கோல் விடைபெற்றனர்!

மலேசிய விளையாட்டுத்துறைக்கு சுகமான 2019ஆம் ஆண்டு

கோலாலம்பூர் –

2019ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2020ஆம் ஆண்டை வரவேற்கும் வேளையில் இவ்வாண்டு மலேசியா விளையாட்டுத்துறைக்கு சுகமான ஆண்டாக அமைந்திருக்கிறது.

7 முறை உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த டத்தோ நிக்கோல் டேவிட் (வயது 36) இவ்வாண்டுடன் ஓய்வுபெற்றார். 27 ஆண்டுகள் அனைத்துலக ஸ்குவாஷ் அரங்கில் அசைக்க முடியாத வீராங்கனையாக இவர் விளங்கினார்.

அதேபோல், 2008 பெய்ஜிங், 2012 லண்டன், 2016 ரியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற டத்தோ லீ சோங் வெய்யும் ஓய்வு பெற்றார். 19 ஆண்டுகள் உலக பேட்மிண்டன் அரங்கில் பல சாதனைகளை படைத்த இவர், அகில இங்கிலாந்து, உலக சாம்பியன், காமன்வெல்த், ஆசியா போட்டியிலும் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.

டத்தோ நிக்கோல் டேவிட்டும் டத்தோ லீ சோங் வெய்யும் அனைத்துலக அரங்கில் இருந்து ஓய்வு பெற்றது வேதனை என்றாலும் இவர்கள் சாதனைகள் பாராட்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் 2022ஆம் ஆண்டில் கட்டாரில் உலக கிண்ணக் கால்பந்துப் போட்டி நடக்கிறது. இதற்கான ஆசிய மண்டல தேர்வாட்டத்தில் சிறப்பான வெற்றிகளை மலேசிய குழு பெற்றது. ஆனால், மலேசிய ஹரிமாவ் குழு சீ போட்டியில் பிலிப்பைன்ஸ், கம்போடியாவிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெரும் ஏமாற்றமாகும்.
இருப்பினும் 2019 பிலிப்பைன்ஸ் சீ போட்டியில் 70 தங்கத்திற்கு இலக்கு வைத்த மலேசியா 56 தங்கம், 58 வெள்ளி, 71 வெண்கலத்தை வென்றது.

சீ போட்டியில் ஜிம்னாஸ்டிக்கில் 9 தங்கம், ஓட்டப்பந்தயத்தில் 5 தங்கம், கராத்தே, டைவிங், திடல் போவ்லிங்கில் தலா 4 தங்கம் கிடைத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஜிம்னாஸ்டிக்கில் இளம் வீராங்கனை பாரா ஆன் 3 தங்கத்தை வென்று சாதித்துள்ளார். அதேபோல் 100 மீட்டரில் இளம் வீரர் முகமட் ஹைய்கால் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

கிஷோனோ

பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் நெகிரியைச் சேர்ந்த இளம் வீராங்கனை கிஷோனோ, இரண்டு உலக வீராங்கனைகளை வீழ்த்தி தங்கம் வென்று சாதித்துள்ளார்.
கராத்தே போட்டியில் மாதுரி, சர்மேந்திரன், பிரேம்குமார் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். மேலும் வில்வித்தையில் காம்பேஸ்வரன், ஸ்குவாஷில் டேரன் ராகுல் பிரசாத், கூடைப்பந்தில் கரிஸ்மாவும் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here