வாஷிங்டன் –
சில வகையான அன்றாய்ட், ஐபோன், வின்டோஸ் கைப்பேசிகளில் இவ்வாண்டு தொடங்கி வாட்ஸ்அப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் செயலியைப் பயன்படுத்தும் விவேகக் கைப்பேசிகளில் இன்று தொடங்கி வாட்ஸ்அப் தொடர்பைப் பெற இயலாது என்று வாட்ஸ்அப் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
அன்றாய்ட், ஐபோன் கைப்பேசிகளுள் சிலவகையிலானவற்றிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும் என்றும் அது குறிப்பிட்டது. பிப்ரவரி முதல் தேதி தொடங்கி அன்றாய்ட் 2. 3. 7 ஆகிய வகைகள் புதிய கணக்கை உருவாக்க முடியாது. அல்லது ஏற்கெனவே இருக்கக்கூடிய கணக்கை உறுதிப்படுத்தவும் முடியாது.
ஐபோன் ஐஓஎஸ்8 மற்றும் அதிலுள்ள பழைய செயலிகள் ஆகியவற்றிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்படும். போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் வின்டோஸ் கைப்பேசிகளுக்கு ஆதரவான செயலி சேவையை நிறுத்திக்கொள்வது என மைக்ரோசாப்ட் முடிவுசெய்துள்ளது.