சூப்பர் லீக் கிண்ணப் போட்டியில் இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட்

ஜெட்டா –

சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகர் அரங்கில் நடந்த ஸ்பெய்ன் சூப்பர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டை எதிர்த்து வெலன்சியா மோதியது.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 15ஆவது நிமிடத்தில் ரியல் மெட்ரிட்டின் கோலை டோனி குருஸ் அடித்தார். பின்னர் 30ஆவது நிமிடத்தில் இஸ்கோ போட்டார்.

பிற்பகுதியில் 65ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலை லூக்கா மொட்ரிச் அடித்து கலக்கினார். 92ஆவது நிமிடத்தில் பெனால்டி வழி வெலன்சியாவின் கோலை டேனியல் போட்டார்.

இறுதியில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று சுப்பர் லீக் கிண்ணப் போட்டி இறுதியாட்டத்திற்கு தேர்வுபெற்றது. இன்று நடக்கும் மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனாவை எதிர்த்து அட்லெட்டிகோ மெட்ரிட் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் கிளப் ஜன.12ஆம் தேதி இறுதியாட்டத்தில் ரியல் மெட்ரிட்டுடன் மோதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here