பேங்காக்கில் ஆசிய பனிச்சறுக்கும் போட்டியில் 2ஆவது தங்கத்தை வென்றார் ஸ்ரீஅபிராமி

பேங்காக் –

தாய்லாந்து பேங்காங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய பனிச்சறுக்குப் போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஸ்ரீஅபிராமி நேற்று 2ஆவது தங்கத்தை வென்றார்.

நேற்று முன்தினம் தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டில் பிரிஸ்டைல் பிரிவில் ஸ்ரீஅபிராமி முதல் தங்கத்தை வென்றார். இந்நிலையில் நேற்று மாலையில் 9 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் பங்கேற்ற ஸ்ரீஅபிராமி 2ஆவது தங்கத்தை வென்றார்.

தாய்லாந்தைச் சேர்ந்த சுடிர்விலாய் வெள்ளியும் மற்றொரு தாய்லாந்து வீராங்கனை திரோபன் வெண்கலமும் பெற்றனர். மொத்தம் 5 பிரிவில் பங்கேற்கும் ஸ்ரீஅபிராமி இன்றும் தங்கத்தை வெல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் என்று அவரின் தந்தை சந்திரன் தெரிவித்தார்.

வரும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பனிச்சறுக்கும் பிரிவில் பங்கேற்கத் தயாராகிக் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி நாட்டில் முன்னணி பனிச்சறுக்கு வீராங்கனையாக விளங்கிக் கொண்டிருக்கிறார். கடந்தாண்டு இறுதியில் ரஷ்யாவில் ஒரு மாதம் பனிச்சறுக்கும் பயிற்சியை மேற்கொண்ட ஸ்ரீஅபிராமி தற்போது மேலும் முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார் என்று சந்திரன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here