தோல்விக்கு என்ன காரணம்? ஆராய்வோம் என்கிறார் மகாதீர்.

கோலாலம்பூர் –

இந்த மிக மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்வோம் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மிக மோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. இந்தத் தோல்வியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்க வில்லை.

கடந்த பொதுத்தேர்தலோடு ஒப்பிடுகையில் இது மிக மோசமான தோல்வி. நாங்கள் மிகச்சிறப்பான நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் சபா மாநில மக்கள் எங்கள் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றனர்.

இந்தத் தோல்விக்கு அடிப்படைக் காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிவோம். ஆனால் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். எதுவும் ஓர் இரவில் நடந்து விடாது.
விவசாயத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை விதைக்கிறாம். ஒரே இரவில் அது துளிர் விட்டு விடாது. அதற்கும் ஒரு காலம் இருக்கிறது.

சபா மாநில மக்கள் விரைவில் எங்களை நன்கு புரிந்து கொள்வார்கள். இந்தத் தோல்வி தொடராது என்றார் மகாதீர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here