சாலையில் புகுந்த ஈரானிய விமானம்: 135 பேர் உயிர் தப்பினர்!

தெஹ்ரான் –

சுமார் 135 பயணிகள் இருந்த ஈரானிய விமானம் நேற்று தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி மாஷார் நகரத்தின் சாலைக்குள் புகுந்தது. எனினும் இந்த விமான விபத்தில் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.

காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானம் நடுச்சாலையில் நின்றதை வீடியோ பதிவுகள் காட்டின.

விமானத்திற்குள் இருந்த 135 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து சென்று விமானத்தின் மீது நீரைப் பாய்ச்சினர்.
காஸ்பியன் ஏர்லைன்ஸ் 6936 எனும் அந்த விமானம் தெஹ்ரான் நகரிலிருந்து புறப்பட்டு தென்மேற்குப் பகுதியில் உள்ள மாஷார் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையை விட்டு விலகியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here