இந்தோனேசியாவில் குப்பை அள்ளும் ஸ்பைடர் மேன்!

ஜாகர்த்தா –

இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளக்கும் விதமாக ஸ்பைடர் மேன் வேடத்தில் குப்பைகளை அகற்றியவருக்கு இணையதளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றது.

அந்நாட்டில் வருடத்திற்கு 3.2 டன் குப்பைக் கொட்டப்படுவதாக சில நாட்கள் முன்பு வெளியான ஆய்வு முடிவு தெரிவித்திருந்தது. மேலும் இந்த குப்பைகள் எல்லாம் கடலில் கொட்டப்படுவதால் பெரும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுவதாக அந்நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பாரிபாரி கடற்கரையை ரூடி ஹார்டோனோ என்பர் ஸ்பைடர் மேன் வேடம் அணிந்து சுத்தம் செய்து வருகிறார். அவருக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகின்றது.

மேலும் சாதாரண உடையில் குப்பை அள்ளியபோது இப்பணியில் தனக்கு உதவ யாரும் முன் வரவில்லை என்றும் ஸ்பைடர் மேன் உடையணிந்து இந்தப் பணியில் ஈடுபட்ட நாள் முதல் அனைவரும் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here