விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் இன்னொரு படத்தில் நயன் தாரா, சமந்தா ஆகிய இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.
விக்னேஷ் சிவன் டைரக்டு செய்கிறார். இவருடைய டைரக்ஷனில், நயன்தாரா ஜோடியாக, நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதி ஏற்கெனவே நடித்து இருக்கிறார்.
அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் கூட்டணி, மேலும் ஒரு படத்தில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.