‘மாபியா’ படம் குறித்து கார்த்திக் நரேன் கூறியதாவது: மாபியா என் இயக்கத்தில் வரும் 3ஆவது படம். சென்னை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை. இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் கண்ணா மூச்சி ஆட்டம்தான் கதை. அது என்ன? எப்படி? என்பதுதான் கதை.
அருண் விஜய் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக வருகிறார். அவரது உடல் மொழி மேனரிசம் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளது. நடிப்பில் மிரட்டியிருக்கிறார். எல்லாவிதமான கேரக்டரையும் செய்யும் திறமையான நடிகர் அவர். இந்தப் படத்துக்காக அவர் உடல் எடையைக் குறைத்து நடித்துள்ளார்.





















