கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

ரோம் –

போர்ச்சுகலைச் சேர்ந்த பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக விளங்குகிறார்.

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் மென்செஸ்டர் அணிக்கும் ஸ்பெய்ன் லா லீகா போட்டியில் ரியல் மெட்ரிட் அணிக்கும் விளையாடினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இத்தாலி லீக் கிண்ணப் போட்டியில் ஜூவெண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் நடந்த ஆட்டத்தில் ஸ்பால் அணிக்கு எதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் ஜூவெண்டஸ் 2-1 என வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இவர் முதல் கோலையும் அடித்தார். மேலும் இது இவருக்கு ஆயிரமாவது ஆட்டமாகும். இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இத்தாலி லீக்கில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த பருவத்தில் மட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ மொத்தம் 21 கோல்களை அடித்து முன்னணி வகிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here