பிரச்சனைகளை தீர்க்கும் மேஜிக் பரிகாரம்

நம்முடைய பிரச்சனைகள் உண்மையாகவே  சமாளிக்க முடியவில்லை. எவ்வளவுதான் தைரியத்தோடு எதிர்நோக்கி நின்றாலும் தலைவலியை தந்து கொண்டிருக்கும் பிரச்சனைகளுகா பஞ்சம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ன செய்யலாம்? உங்களுக்கான சுலபமான ஒரு பரிகாரம் தான் இது. நம்பிக்கையோடு செய்து பார்த்தபின் உங்களுக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியே பிரச்சனையை சரி செய்ய தூண்டுகோலாக அமைந்துவிடும் பாருங்கள்!
சனிக்கிழமை அன்று வெள்ளைக் காகிதத்தில், கருப்பு நிறப் பேனா கொண்டு உங்களுக்கு இருக்கும் பெரிய கஷ்டத்தை எழுதி விடுங்கள். அதன்பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு அந்த பேப்பரை சுருட்டி ஒரு நூலால் கட்டி, மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து உங்களுடைய குறைகள் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று நினைத்து, அந்த நெருப்பில், குறைகள் எழுதப்பட்ட பேப்பரை பொசுக்கி விடுங்கள். எரிந்த பின் அந்த சாம்பல் அனைத்தையும் எடுத்து குப்பையில் போட்டு விடலாம். உங்களது குறை சிறியதாக இருந்தால் இரண்டு, மூன்று முறை இப்படி செய்தால் சரியாகிவிடும்.
உங்களது குறை தீராத குறையாகவும், வெகுநாட்கள் சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருந்திருந்தாலும் 8 வாரங்கள் தொடர்ந்து இப்படி செய்து வர நல்ல பலன் கிடைக்கும். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், எங்கு வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். பரிகாரம் என்று சொல்வதைவிட இது ஒரு மேஜிக். நம்பிக்கையோடு செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here