மக்களின் தேவைக்காக வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்

வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்

கோலாலம்பூர், மார்ச் 17-
கொரோனா வைரஸ் தொற்று நோயால் செலாயாங் பாசார் போரோங் மூடப்படுகிறது என்று வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ நோர் இஸாம் தெரிவித்தார்.

செலாயாங் பாங்ார் போரோங்கை மூடும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. பாசார் போரோங் மூடப்படுகிறது என்று கூறப்படுவதெல்லாம் வதந்திகளாகும் என்று அவர் சொன்னார்.

செலாயாங் பாசார் போரோங் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று நேற்று முன்தினம் புலனத்தில் வெளிவந்த வதந்தியால் நாடே பெரும் பரபரப்புக்குள்ளானது.

பாசார் போரோங் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த டத்தோ பண்டார் டத்தோ நோர் இஸாம், இது உண்மையில்லை என்றார்.

இதனிடையே, செலாயாங் பாசார் போரோங்கில் காய்கறிகளை விற்பனை செய்து வரும் அனைத்து வியாபாரிகளும் தங்களின் ஊழியர்களை கண்டிப்பாக மருத்துவப் பரிங்சோதனைக்கு அனுப்பி வைக்கும்படி கோலாலம்பூர் காய்கறி விற்பனையாளர் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

பாசார் போரோங் வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பெட்டாலிங் ஜெயாவில் நடந்த சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

ஆகையால், தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் யாராவது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here