ஜெர்மனியில் உணவு விநியோகிப்பாளராக வேலை செய்யும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்!

ஆப்கானிஸ்தானின் முன்னாள் தகவல் தொடர்புத் துறை அமைச்சரான சையத் அகமத் (Syed Ahmad), ஜெர்மனியில் உணவு விநியோகிப்பாளராக வேலை செய்துவரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இவர் ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் அப்பகுதி வாசிகளுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறார் என்பதை ஜெர்மனி ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

விநியோகத்திற்காக உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சையத் அகமத் (Syed Ahmad) செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த சையத் அகமத், அதன்பின்னர் ஜெர்மனியின் லீப்ஜிக் நகருக்குக் குடிபெயர்ந்தார்.

இதுகுறித்து சையத் அகமத் (Syed Ahmad) கூறும்போது, “நான் தற்போது எளிமையாக வாழ்கிறேன். மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் நிறைய பணிகளுக்கு முயற்சி செய்தேன். ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை.

நான் பணிக்குச் செல்லும் பணத்தைச் சேமித்து ஜெர்மன் கற்று வருகிறேன். ஜெர்மன் டெலிகொம் துறையில் பணிக்குச் சேர்வதுதான் தற்போது என் இலக்காக உள்ளது” என அவர் கூறியுள்ளார்.

தகவல் தொடர்புத் துறை அமைச்சராக சையத் அகமத் (Syed Ahmad) இருந்த காலத்தில், ஆப்கானில் கிராமப்புறப் பகுதிகளில் தொலைபேசி சேவையைக் விரிவுப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here