விபரீதம் வேண்டாம் கட்டுப்படுங்கள்

விபரீதம் வேண்டாம் கட்டுப்படுங்கள்

கோலாலம்பூர், மார்ச் 19-

நல்ல செய்தியை அனைவருக்கும் தெரிய படுத்தவேண்டும் என்பது நல்லெண்ணம் சார்ந்தது. நல்ல செய்திகளை விரும்பி பதிவிடும்போது அச்செய்திகள் மற்றவர்களுக்கும் நன்மை பயக்குமானால் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிவிடும். இரட்டிப்பு மகிழ்ச்சி இன்னும் பெருகி பலரைச் சேர்ந்துவிடும்.

இதே மகிழ்ச்சியை அனுபவிப்பது ஒன்று. அதன்படி பின்பற்றுவது மற்றொன்று. மகிழ்சியயான செய்தியாக இருந்தால் சில மணி நெரத்தில் மறந்து விடுகின்றவர்களாகத்தான் மக்கள் இருக்கிறார்கள். கெட்டதாக இருந்தால் பல நாட்கள் வரை மனத்தில் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

இன்றைய நிலையில் நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தெரிந்தும் என்ன செய்வது? மக்கள் இன்னும் சரியான செய்தியைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால் அந்தத் தீமை பல்கிப்பெருகிக்கொண்டே போகிறது.

ஒன்று இரண்டாகி. இரண்டு பன்மடங்காகி இன்றைய நிலையில் 790 என்ற எண்ணிக்கையில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளரும் என்ற ஐயமும் மக்களை இறுக்கிகொண்டிருக்கிறது. இந்த இறுக்கத்திற்குக் காரணம் கொரோனா 19 தான் காரணம்.

ஆனாலும் பல்லாயிரம் மக்களுக்கு இதன் பாதிப்பு பற்றித் தெரியவே இல்லை. இன்னும் அலட்சியம் நிலவுகிறது என்பதாகவெ இருக்கிறது. குறிப்பாக, இந்நோய் நமக்கானது அல்ல. அது நம்மிடம் நெருங்காது என்ற எண்ணமே பலரிடம் இருக்கிறது.

இக்கட்டான காலக்கட்டத்தில் நாட்டின் நிலைமை இருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லித்தான் ஆகவேண்டும். கொடூரமான கொரோன 19 மக்களை விழுங்கத் துடித்துக்கொண்டு கிளம்பியிருக்கிறது.

இந்நோயை யாரோ ஏவியிருக்கிறார்கள். விமானம் ஏறி மலேசியாவுக்குள் கள்வனைப்போல் நுழைந்துவிட்டது. அண்டை நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்று அறிந்த உடனேயே தடுக்க முயற்சித்திருந்தால் 790 என்பதை ஏழோடு நிறுத்தியிருக்கலாம்.

காலம் கடந்துவிட்டாலும் நமது முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அரசியல் நெருக்கடி நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு கொரோனா 19 உள்ளே நுழைந்துவிட்டது, விழித்துக் கொள்வதற்குள் அது வேலிதாண்டிவிட்டது.

மருத்துவர் ஒருவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். நாங்கள் உங்களுக்காகச் சேவை செய்கிறோம். நீங்கள் எங்களுக்காக வீட்டில் இருங்கள். என்பதுதான் அந்த வாசகம்.

அரசாங்கம் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஆணைப்பிறப்பித்திருக்கிறது. அந்த ஆணை மதிக்கப் படவில்லையென்றால். இன்னும் கட்டுப்பாடுகள் அதிகமாகலாம். வீட்டின் வாசலைக்கூடத் தாண்டமுடியாமல் போகலாம். விபரீதம் வேண்டாம். கட்டுப்படுங்கள், அனைவருக்கும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here