கோலாலம்பூர் , மார்ச் 20-
மனித கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிறப்படுகின்ற என்பது பரவலான செய்தி. மக்களில் 60 விழுக்காட்டினர் இன்னும் எம்ஓசி அமலாக்கத்தை அனுசரிக்கவில்லை என்பது பரவலான செய்தியாக இருக்கிறது.
இதன் உண்மை நிலைபற்றித்தெரிந்துகொள்ள மன்னரின் நகர்வலம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சாலைத் தடைகள் அமைக்கப்பட்ட பல இடங்களை மாமன்னர் இன்று நேரில் சென்று கண்டு விவரங்கள் சேகரித்தார். கொரோனா 19 தொற்று பரவிக்கொண்டிருக்கும் போதும் பணியில் ஆழ்ந்து கடமையாற்றிக்கொண்டிருக்கும் அனைவரையும் அவர் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
சாலைவிதிகளுக்குட்பட்டு முகக்கவசம் அணிந்து அவர் நகர்வலம் வருவது அவருக்கே உரித்த கடமையுணர்வைக் காட்டுவதாக மக்கள் கருத்து கூறினர்.
நெடுஞ்சாலைகளின் போக்குவரைத்தையும் அவர் பார்வையிட்டார்.
அனைவரும் அவசியம் கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.