சென்னை கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்ல தடை

மெரினா கடற்கரை, சென்னை

பிரதமரின் வேண்டுகோளின்படி நாளை நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கும் நிலையில் சென்னை கடற்கரை பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,மார்ச் 21-

கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவாமக் இருக்க நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே சுயஊரடங்கை கடைப்பிடிக்கும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், மக்கள் அனைவருமே தாமாக முன் வந்து ஊரடங்கை பின்பற்ற தயாராகிவிட்டார்கள்.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிமுதல் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை சென்னை மெரினா, எட்வர்ட் எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மக்கள் செல்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here