நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்களாக 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிமன்றத்தின் புதிய உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் முன்னிலையில் ஸ்ரீ மெனந்தி அரண்மனையில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) பதவியேற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் மாநில மந்திரி பெசார் டேத்தோ இஸ்மாயில் லசிம், சுங்கை உஜோங் வட்டாரத் தலைவர் முகமட் ஃபாரிஸ், ரெம்பாவ் வட்டாரத் தலைவர் ராஜா ஹசான் அப்துல் ஹமிட் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய ஆட்சிமன்றத்தில் இடம் பெற்றிருந்த லிங்கி சட்டமன்ற உறுப்பினர் முகமட் பைசல் ரம்லி மற்றும் பலோங் சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா நாகூர் ஆகிய இருவர் மீண்டும் ஆட்சிமன்ற உறுப்பினர்களாகத் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகமட் பைசல் ரம்லி (லிங்கி), முஸ்தபா நாகூர் (பலோங்), ஜைபுல்பஹ்ரி இட்ரிஸ் (செம்போங்), சியோவ் காங் சூன் (சென்னா), சித்தி நூர் உமைரா ஹாசிம் (லாபு), முகமட் அஸ்னா அமீன் (லெங்கெங்), முகமட் ரசி முகமட் அலி (சுங்கை லூய்), சுஹைமிஜான் பிசார் (ஜெமன்சே), முகமட் ஃபைரூஸ் முகமது ஈசா (செர்டிங்), ரசாலி அபு சாமா (சிகாமாட்) ஆகிய 10 பேர் ஆட்சிமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பாரிசான் நேசனல் (BN) கூட்டணி 18 தொகுதிகளிலும், பெரிக்கத்தான் நேஷனல் (PN) கூட்டணி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனைத் தொடர்ந்து, இரு கூட்டணிகளும் இணைந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மாநிலத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here