நாட்டின் சுழல் கொரோனாவில் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு பரிகாரம் காண பல தரப்புககள் உதவத் தயராகிக் கொண்டிருக்கின்றன. உதவிகளை வழங்கியும் வருகின்றன.
இதில் ம.இ.கா. மகத்தான பங்காற்றி இருக்கிறது. இந்தியவிலிருந்து திரும்ப முடியாதவர்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. இதற்கான செலவுகள் ஒருபுறமிருக்க சரியான தருணத்தில் செய்த காரியமகவே போற்றபடுக்கிறது.
சிலவற்றை யோசித்துதான் முடிவு செய்யவேண்டும். சிலவற்றை யோசிக்காமல் செய்யவேண்டும்.அதில் ஒன்றுதான் இந்தியாவுக்கு ஆன்மீகப்பயணம் சென்றவர்கள் திரும்ப வழியின்றித்தவித்ததை உணர்ந்து கொண்டுவந்த காரியம் மகத்தானது என்கின்றனர்.
இப்போது இக்கட்டான நேரம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதைய நிலையில் ஒன்றுகூடல்கள் அல்ல. கலந்துரையாடல்கள் அல்ல. சினமா அல்ல. கூத்து, கச்சேரிகள் அல்ல. மக்களின் சிரமங்கள் உணரப்படவேண்டும்.
வசதியற்றவர்களுக்கு எந்த வகையில் உதவமுடியும் என்பதுதான்.
சமயம் சார்ந்த உதவிகளாக இருக்கவேண்டும் என்பதல்ல. மனிதாபிமான உதவிகள் வழங்கலாம். முக்கக்கவசம் வழங்குவது கூட பெரிய உதவியாகவே இருக்கும்.
தெருவில் திரியும் மன நல பாதிப்பாளர்களுக்கு என்ன செய்யமுடியும் என்பதுதான்.
உணவு, குழந்தைகளுக்குப் பால் உணவு என்றெல்லாம் கூட வழங்குவதற்கு ஆயத்தமாகலாம். வருமானமே இல்லாதவர்களுக்கு அருகில் உள்ள ஆலயங்கள் முன்வந்து ஏதேனும் செய்யவேண்டும்.
இப்போதைக்குத் தேவை மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்கிறார் பொதுச்சேவையாளர் திருக்குமரன். ஆலயங்கள் வழிபாட்டுக்கு மட்டும் இல்லாமல் துன்பம் வரும் நேரத்தில் வழிகாட்டவும் தவறக்கூடாது என்று ஆ.அன்பழகன் கூறுகிறார்.