ரோஹிங்யா மக்கள் அவசரச் சோதனைக்கு உட்பட அழைப்பு

சமய சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21-

சமய சந்திப்பில் கலந்துகொண்டவர்கள ரோஹிங்யா தலைவர்கள் கொரோனா 19 சோதனைக்கு உட்படவேண்டும் என்று அவசரப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்ரீ செர்டாங் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுமார் 2000 ரோஹிங்ய தலவர்களை அவசியம் பரிசோதனை செய்துகொள்ளும்படி ரோஹிங்ய மக்கள் இயக்கத்தலைவர் பொ நிங் மாய்ங் ஊடகம் வழி இச்செய்தியைக் கூறியிருக்கிறார்.

ரோஹிங்யா மக்கள் பலர் எழுதப் படிகத் தெரியாதவர்கள். ஆதலால் அவர்களுக்கு இச்செய்தி போய்ச் சேரவேண்டும். அல்லது சேர்க்கப்படவேண்டும். ஆதலால் முகநூல், வாட்சாப், ஒலி ஒளிவழி இதைத் தெரிவிக்க வேண்டியிருப்பதாக அவர் கூறினார்.

மலேசியாவில் 101,010 ரோஹிங்யா மக்கள் பதிவு பெற்றிருக்கின்றனர்.
இவர்களின் கவனத்திற்காக இவர்கள் வாழும் கோம்பாக் பகுதிகளில் சீற்றறிக்கைகள் விநியோகிக்கப்பட்டிருப்பதை இவர்களின் சிலாங்கூர் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ரஃபிக் ஷா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இவர்கள் சுயமாகவே தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆறு மொழிகளில் ரோஹிங்யா மக்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here