அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் தவறான பணமாற்று விகிதம்; மன்னிப்பு கேட்டது Google Malaysia

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் பணமாற்று விகிதத்தை தனது நிதிப் பக்கத்தில் தவறாக வெளியிட்டதற்காக Google Malaysia மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

“தவறைச் சரிசெய்ய, அமெரிக்க டாலர்-ரிங்கிட் பணமாற்று விகிதத்தை வழங்கிய மூன்றாம் தரப்பினரை நாங்கள் உடனடியாகத் தொடர்புகொண்டோம். அந்தத் தவறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது.
குழப்பத்திற்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று Google Malaysia தனது ‘X’ சமூக ஊடகத்தில் தெரிவித்தது.

தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பணமாற்று விகிதங்களை வழங்குவதாக அது சொன்னது.

“நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க, ‘பேங்க் நெகாரா மலேசியா’ போன்ற அதிகாரபூர்வ தளங்களை நாடுங்கள்,” என்றும் அது மேலும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here